மேஷம்

laknam
வாரபலன்
மாத பலன்
ஆண்டு பலன்

மேஷ ராசி அன்பர்களே,

இந்த மாதம் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். உங்கள் சொல்லிலும், செயலிலும் வேகம் கூடும். வரவை விட செலவுகள் ஒரு படி அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சில முக்கிய மாறுதல்கள் ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பும், மரியாதை உயரும். மனதிற்குள் சிறு சிறு சங்கடங்கள் வந்தாலும் அதை பெரிது படுத்த வேண்டாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கவலைகள் அகலும். பெற்றோர்கள் வகையில் சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். முக்கியமான விஷயங்களில் கவனத்தை அதிகம் வைக்கவும். பண வரவு திருப்தியாக இருக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். கொடுத்த வாக்கை தவறாமல் காப்பாற்றுவீர்கள். வாகனம், வீடு போன்றவற்றால் அதிக செலவு ஏற்படும். நண்பர்களிடம் ஒரு அளவோடு இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக்வருத்தங்கள் நீங்கும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். ஆன்மிகம் பயணம் செல்வதில் ஆர்வம் ஏற்படும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது மிகுந்த கவனத்தோடு இருக்கவும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைக் காண்பர். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். உத்யோக பணிகளை கவனமாக மேற்கொள்ளவும். தொழில், வியாபாரம் அதிவேகமாக நடைபெறும். தொழில் முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு மே மாதம் சிறப்பாக இருக்கும்.
சந்திராஷ்டமம் : 20,21,22,23 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

 

ராசி நாதன்
செவ்வாய்
அதிர்ஷ்ட தெய்வம்
முருகன்
திசை
மேற்கு
அதிர்ஷ்ட எண்
1, 8
அதிர்ஷ்ட எழுத்துக்கள்
நெருப்பு
அதிர்ஷ்ட கல்
பவளம்
அதிர்ஷ்ட உலோகம்
செப்பு
அதிர்ஷ்ட நாட்கள்
செவ்வாய்
அதிர்ஷ்ட நிறம்
சிவப்பு
ராசி சார்பு
நீர்
ராசி பற்றி மேலும் அறிய