மேஷ ராசி அன்பர்களே,
இந்த வார பலன்படி, எந்த ஒரு பிரச்சனையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம், ஏன் எனில் மன நலம் பாதிக்கப்பட்டாள் உடல் நலமும் பாதிப்புக்கு உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வுகள் நடக்கும். உறவினர்கள் வழியில் செலவுகள் கூடும். நண்பர்களால் மனஸ்தாபம் ஏற்படலாம். உடல் உபாதைகள் நீங்கும். மருத்துவரின் தகுந்த அலையோசனைன்றி எந்த மருந்து மாத்திரையும் உட்கொள்ள வேண்டாம். உங்களுடைய செலவுகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். குடும்ப வருமானம் பெரியதாக எதிர்பார்க்க முடியாது. கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.